15 இயக்க விதிகளும் ஈர்ப்பியலும்
1ஒரு பொருளின் முடுக்கத்திற்குக் காரணம்---------------
2உந்த மாறுபாட்டு வீதத்திற்குச் சமமான இயற்பியல் அளவு--------------
3ஓய்வு நிலையிலுள்ள கனமான பொருளின் உந்தம் --------------
4புவிப்பரப்பில் 50கி.கி நிறையுள்ள மனிதனின் எடை--------------
5உயிரித்தொழில்நுட்ப ஊசிமருந்துகளைக் குளிரச் செய்ய -----------------குளிரித்
தொழில்நுட்ப அமைப்பு தேவை
6சமநிறை பெற்ற இரு பொருள்கள்A,B முறையே 20கிமீ /மணி மற்றும் 50கிமீ/மணி வேகத்தில்
ஒருவர் மீது மோதி உடனடியாக ஓய்வுநிலைக்குத் திரும்புகிறது அவர் மீது அதிக விசை செலுத்தும்
பொருள் எது?விடைக்குக் காரணம் தருக
7பொருளொன்று 20மீ/வி என்ற திசைவேகத்தில் இயங்குகிறது அதன் மீது 10Nவிசையானது
திசைவேகத்திற்கு செங்குத்து திசையில் செயல்படுகிறது10வினாடிகளுக்குப்பின்பு பொருளின்
வேகம் என்ன?
8.கூற்று;பெருநகரங்களில் புவியின் அடியில் அமைக்கப்பட்ட கம்பி வடங்களில் திரவமாக்கப்பட்ட
குளிரி வாயுக்கள் தெளிக்கப்படுகின்றன
காரணம்;திரவமாக்கப்பட்ட குளிரி வாயுக்கள் திறன் வீணாவதைத் தடுக்கின்றன
9புவிப்பரப்பில் ஈர்ப்பு முடுக்கம் -----------பகுதியில் பெருமமாகவும்
--------------பகுதியில் சிறுமமாகவும் இருக்கும்
10புவியின் நிறைமாறாமல் தற்போதைய மதிப்பிலிருந்து புவியின் ஆரம் பாதியாகக் குறையுமானால்
புவியீர்ப்பு முடுக்கத்தின் மீது ஏற்படும் பாதிப்பு என்ன?
11செல்வி அலுவலகத்திற்குக் காரை ஓட்டி செல்லும்போது தனது கைப்பையைப் பயணி இருக்கையில்
வைத்திருக்கிறார் அவர் அலுவலக்கத்தை அடைந்தவுடன் கைப்பையானது இருக்கையானது இருக்கையின்
முன்னால் கீழே விழுந்து கிடக்கிறது ஏன் இவ்வாறு நிகழ்ந்தது என்பதை விளக்குக
12கிரிக்கெட் களவீரர் பந்தைப்பிடிக்கும்போது கையை பின்னோக்கி இழுப்பது ஏன்?
13கீழ்க்காணும் கூற்றுகளில் ஒரு பொருளின் நிறையோடு தொடர்பில்லாத கூற்றை எழுதுக
14சந்திராயன் 1 திட்டத்தோடு தொடர்புடைய சில நிறுவனங்களின் பெயர்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன
ஆனால் சிலபெயர்கள் அவையோடு தொடர்பில்லாதவை தொடர்பில்லாத நிறுவனங்களின் பெயர்களைப் பட்டியலிடுக
விடை1சமன் செய்யப்படாத விசை 2,விசை 3,சுழி4,490N5.நைட்ரஜன்6.அதிக விசை செலுத்தும்
பொருள் 50கி.மீ/மணி வேகத்தில் செல்லும் பொருள்B ஆகும்7.10 வினாடிக்குப் பின்பும் பொருளின்
வேகம் 20மீ/வி ஆகவே இருக்கும் 8.Aசரியானது R,Aஜ வலியுறுத்துகிறது9.துருவப்,நில நடுக்கோடு10.புவியின்
நிறைமாறாமல் புவியின் ஆரம் பாதியாக குறையுமானால் புவியின் முடுக்கம் 4 மடங்கு இருக்கும்11.இது
இயக்க நிலைமத்தால் நிகழ்ந்தது12.நியுட்டனின் இரண்டாம் இயக்க விதியின்படி உந்த மாறுபாட்டு
வீதம் சமமற்ற விசைக்கு நேர்தகவில் அமைவதோடு அவ்விசையின் திசையிலேயே அமையும் என்பதற்கு
இது ஒர் எடுத்துக்காட்டு ஆகும்13.இது வில் தராசு கொண்டு அளக்கப்படுகிறது.14தொடர்பில்லாத
நிறுவனங்கள் BARC,WHO,ONGC
Comments
Post a Comment